×

‘கள்ளக்காதல் மட்டுமல்ல டிக் டோக்கிலும் அட்டகாசம்’: மனைவியை கொன்ற கணவரின் பகீர் வாக்குமூலம்!

கள்ளக்காதல் காரணமாக மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்: கள்ளக்காதல் காரணமாக மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் கொடைரோடு அருகே கடந்த ஜூலை 14-ஆம் தேதி, சாக்கு மூட்டை ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்த போது, அதனுள் ஒரு பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. இதனிடையே, கரூர்
 

கள்ளக்காதல் காரணமாக மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல்: கள்ளக்காதல் காரணமாக மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் கொடைரோடு அருகே கடந்த ஜூலை 14-ஆம் தேதி, சாக்கு மூட்டை ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்த போது, அதனுள் ஒரு பெண்ணின் சடலம் பாதி எரிந்த  நிலையில் காணப்பட்டது. 

இதனிடையே, கரூர் மாவட்டத்தில் உள்ள, தான் தோன்றிமலையில் உள்ள சிவசங்கரன் என்பவர், தனது மனைவி சூரியகுமாரியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போது, எரிந்த  நிலையில் கிடந்த சடலம் சூரியகுமாரி என்பது தெரியவந்தது.  அதன்படி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு சிவசங்கரன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அதில் சிவசங்கரன்,  சூரியகுமாரியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிவசங்கரன் கைது செய்யப்பட்டார். 

இதைத் தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது மனைவிக்கும் இளைஞர் ஒருவருக்கும் கள்ளஉறவு இருந்தது. நான் அவரை கண்டித்தேன். ஆனால்  என் மனைவி அவருடன் தொடர்ந்து பழகி வந்தார்.  மேலும் இன்னொரு வாலிபருடன் இணைந்து ‘டிக்-டோக் ’ வீடியோ எடுத்து வெளியிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி இரவு வீட்டுக்கு சென்ற நான், தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன். இதையடுத்து அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொடைரோடு அருகே உள்ள  காலியிடத்தில் வீசியதோடு, என் செல்போனையும் வீசிவிட்டு மீண்டும் தான் தோன்றிமலைக்கு திரும்பினேன். என்மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்று  9-ந்தேதி சூரியகுமாரியை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தேன்’ என்றார். 

இருப்பினும் சாக்கு மூட்டை எரிந்த  நிலையிலிருந்ததால் யார் அதை கொளுத்தியிருப்பார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.