×

‘உடனடியாக பணிக்குத் திரும்பிடுக!’ – ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நேரம் வீணடிக்கப்படுவதாகவும், உடனடியாக அரசு
 

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நேரம் வீணடிக்கப்படுவதாகவும், உடனடியாக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். 

இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜனவரை 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்பிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தடை கோரி மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புவதா அல்லது நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்வதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.