×

‘அப்பாவின் கடன்; காதலனின் உதாசீனம்’ : அண்ணா பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!

லோகேஸ்வரியும் தர்மபுரியை சேர்ந்த அவரது வகுப்பு மாணவன் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது மகள் லோகேஸ்வரி என்பவர் பிஇ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இதனால் நவல்பட்டு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். லோகேஸ்வரியும் தர்மபுரியை சேர்ந்த அவரது வகுப்பு மாணவன் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரே ஊர் என்பதால் இவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்ள இருவரும்
 

லோகேஸ்வரியும் தர்மபுரியை சேர்ந்த அவரது  வகுப்பு மாணவன்  ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்

திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது மகள் லோகேஸ்வரி என்பவர் பிஇ இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.  இதனால் நவல்பட்டு  அருகில் உள்ள   தனியார் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். லோகேஸ்வரியும் தர்மபுரியை சேர்ந்த அவரது  வகுப்பு மாணவன்  ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரே ஊர் என்பதால் இவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக்  கூறப்படுகிறது. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துகொள்ள இருவரும் காத்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து விடுதிக்கு சென்ற லோகேஸ்வரி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக தோழிகள் போலீசுக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவி லோகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

லோகேஸ்வரியின் தந்தை ஜெயவேலுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் கல்லூரி படிப்பை தொடர, கல்வி ஊக்கத்தொகைக்காக விண்ணப்பிக்க காதலனை அழைத்துள்ளார். அவர் வரவில்லை என்றதும் மனவருத்தத்திலிருந்த லோகேஸ்வரி மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  இருப்பினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.