×

‘அடுத்த மூன்று மாசத்துக்கு சிக்கன் வாங்காதீங்க’ : வெளியான பரபரப்பு தகவல் !

மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே வருவதால், அதற்கு ஏற்றாற் போலக் கோழிகளின் தேவையும் அதிகரிக்கிறது. பிராய்லர் கோழி என்றாலே, அந்த கோழிக்கு ஊசிபோட்டுத் தான் வேகமாக வளரச் செய்து விற்பனை செய்கிறார்கள், அதனை யாரும் உண்ணாதீர்கள் என்று தகவல் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமே உள்ளன. எவ்வளவு தான் தகவல்கள் வந்தாலும், மக்கள் அதனை வாங்குவதை நிறுத்தவில்லை. மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே வருவதால், அதற்கு ஏற்றாற் போலக் கோழிகளின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால், பிராய்லர் கோழிகளை வேகமாக
 

மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே வருவதால், அதற்கு ஏற்றாற் போலக் கோழிகளின் தேவையும் அதிகரிக்கிறது.

பிராய்லர் கோழி என்றாலே, அந்த கோழிக்கு ஊசிபோட்டுத் தான் வேகமாக வளரச் செய்து விற்பனை செய்கிறார்கள், அதனை யாரும் உண்ணாதீர்கள் என்று தகவல் தொடர்ச்சியாக வெளியாகிய வண்ணமே உள்ளன. எவ்வளவு தான் தகவல்கள் வந்தாலும், மக்கள் அதனை வாங்குவதை நிறுத்தவில்லை. 

மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே வருவதால், அதற்கு ஏற்றாற் போலக் கோழிகளின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால், பிராய்லர் கோழிகளை வேகமாக வளரச் செய்வதற்கு ஊசி போட்டு 40 முதல் 45 நாட்களுக்குள்ளேயே 1.5 கிலோ எடை வரை வளர வைத்து விடுகின்றனர். ஆனால், நாட்டுக் கோழிகளோ அந்த அளவுக்கு எடையுடன் இருக்காது. 

இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழிகளை நாம் உண்டால், நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் சமீப காலங்களாக வெளியாகி வருகின்றன. இதில், நமக்கு இன்னும் அதிர்ச்சி தரும் வகையில், பிராய்லர் கோழி குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

அதாவது. ஊசி போட்டு 45 நாட்களில் வளர்க்கப்படும் இந்த வகை கோழிகளை 20 நாட்களில் வளர்ப்பதற்காக, கோழிகளுக்குக் கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாகவும் அந்த மருந்து கோழிகளுக்கு ஏற்றுக் கொள்ளாமல் அவைகளுக்கு கேன்சர் வந்துவிடதாகவும் தகவல் பரவுகிறது.

 அதுமட்டுமின்றி, அந்த கேன்சர் வந்த கோழிகளை மற்ற கோழிகளுடன் இணைத்து விற்பனைக்கு அனுப்பி வருவதாகவும், இதனால் 3 மாதத்திற்கு பிராய்லர் கோழி வாங்க வேண்டாம் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின்றன. இந்த தகவலின் படி, நோயால் பாதிக்கப்பட்ட கோழிகள் உண்மையாகவே விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளதா என்று இதற்குச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளன.