பக்தர் காணிக்கையாக வழங்கிய பஞ்சலோக டாலரை அபேஸ் செய்த பூசாரி
பக்தர் காணிக்கையாக வழங்கிய பஞ்சலோக டாலரை பூசாரி அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் ஸ்ரீ பூர்ணா சிற்பக்கலை கூடத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு கோயில் ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருவுருவம் பொறித்த பஞ்சலோகத்தில் ஆன டாலர் மாலையை கோயிலில் பணி புரியும் பூசாரி ஒருவரிடம் தந்துள்ளார். ஆனால் இது தொடர்பாக கோயில் நிர்வாகத்துக்குதகவல் தெரிவிக்கவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட பூசாரி அந்த டாலரை முறைகேடாக அவன் திருடி அணிந்து கொண்டுஉள்ளார். கடந்த 12ம் தேதி இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அவர் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது பஞ்சலோக டாலரை பூசாரி அணிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காததால் அந்த பக்தர் மன வேதனை அடைந்துள்ளார்..