“வருகின்ற தேர்தலில் காங்கிரஸை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்”- ஹசீனா சையத் பரபரப்பு அறிக்கை
அண்மையில் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஹசீனா சையத் நீக்கப்படுவதாக, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அறிவித்தார். இதையடுத்து, கட்சியில் இருந்து ஹசீனா சையத் விலகினார்.
இந்நிலையில் ஹசீனா சையத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பார்ந்த தமிழ்நாட்டின் இஸ்லாமிய வாக்காள பெருமக்களுக்கு "அஸ்சலாமு அலைக்கும்"... கிட்டத்தட்ட 30 ஆண்டுகால எனது அரசியல் பயணம் காங்கிரஸ் கட்சியில், பெயரளவிற்கு தான் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. இவர் ஒழிய உள்ளே நடக்கும் விஷயங்கள் இஸ்லாமியருக்கு எதிரான விஷயங்கள் மட்டுமே. சட்டமன்றத் தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலிலும்,2024 பாராளுமன்ற தேர்தலிலும் ஒரு இஸ்லாமியர்களுக்கு கூட இவர்கள் பாராளுமன்றத்தில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாய்ப்பு தரவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஒரே குடும்பத்திற்கு மட்டுமே பாராளுமன்ற தேர்தலாகட்டும் சட்டமன்றத் தேர்தலாகட்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டு வருகின்றது. கட்சியில் பல சீனியர் இஸ்லாமிய தலைவர்கள் இருந்தபோதிலும் வாய்ப்புகள் இவர்களின் குடும்பத்திற்கு மட்டும்தான். தமிழ் பேசும் முஸ்லிம்கள், உருது பேசும் முஸ்லிம்கள் என்று இரண்டு சகோதரர்கள் இருந்தாலும், இதுவரை காங்கிரஸ் வரலாற்றில் அந்த ஒரு குடும்பமும் தமிழ் பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே, இதுவரை உருது பேசும் ஒரு இஸ்லாமியருக்கு கூட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சட்டமன்றத்திற்கு செல்லவும் பாராளுமன்றத்திற்கு செல்லவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கும் சீட்டும் கூட இரண்டு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் மட்டும்தான்.
வாக்கு விகிதாச்சரத்தின் அடிப்படையில் மூன்று இஸ்லாமியர்களுக்கு சீட்டு அளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியில் குரள்கள் எழுப்பப்பட்டுக் கொண்டு தான் இருந்தது. ஆனால் அது உழைக்கும் இஸ்லாமியர்களுக்காக கேட்கப்பட்ட அந்த உரிமையை மறுத்து கட்சிக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் பல நல்ல இஸ்லாமிய தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள், நான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தோற்றுவித்த பிறகும் கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இஸ்லாமிய மகளிர் காங்கிரஸ் மாநில தலைவியாக நியமிக்கப்பட்டேன், எனக்கு கூட ஒரு சட்டமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, மேலவை தேர்தல் என்றாலும் சரி, சட்டமன்ற தேர்தல் என்றாலும் சரி இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். மைனாரிட்டி டிபார்ட்மெண்ட் என்று உள்ளது அதற்கு ஒரு தலைவர் உள்ளார், அவரும் புறக்கணிக்கப்படுகிறார், பைத்துல் மால்கள் பல நடத்தி இஸ்லாமியர்களுக்கு சேவை செய்யும் தலைவரும் புறக்கணிக்கப்படுகிறார்.
உரிமையைக் கேட்டால் நடவடிக்கை என்கிற பெயரில் மிரட்டப்படுகின்றோம், கிட்டத்தட்ட 77 மாவட்ட தலைவர்களில் போன மாவட்ட தலைவர்களில் இரண்டே பேர் மாவட்ட தலைவராக இருந்தார்கள். தற்போது ஐந்து இஸ்லாமியர்கள் மாவட்ட தலைவராக இருக்கின்றார்கள், இதை தற்போது காண்பித்து தற்போது இருக்கக்கூடிய மாநில தலைவர் கூறுகிறார். ஐந்து இஸ்லாமியர்களுக்கு மாவட்ட தலைவர் பதவி கொடுத்துள்ளோம் என்று 77 ல் 5 என்பது என்ன விகிதாச்சாரம். சரி கட்சி பதவியும், தேர்தல் பதவியும் சமமாகுமா? தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகின்றது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு பாடம் புகட்டும் விதமாக காங்கிரஸை இஸ்லாமிய மக்கள், வருகின்ற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும், அதை விடுத்து அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய நல்ல வேட்பாளர்களுக்கு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் அப்போதுதான் இவர்களுக்கு இஸ்லாமியர்கள் என்பது வெறும் வாக்கு வங்கி மட்டுமல்ல அவர்களுடைய வாக்கு நமக்கு மிகவும் முக்கியம் என்பது புரியவரும். இவர்கள் நம் மீது என்ன விதமான அநீதிகளை செய்தாலும் நாம் இவர்களுக்கு பின்னாடியே சென்று இவர்களுக்கு வாக்களிப்பதால் தான் இவர்கள் இஸ்லாமியர்களை இப்படி நடத்துகின்றார்கள். பட்டியல் இண தேசிய தலைவர், பட்டியல் இண மாநிலத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பட்டியல் இனத்தவர், மேலவை உறுப்பினரும் பட்டியல் இனத்தவர், 28 சீட்டில் ஆறு சீட்டு பட்டியல் இனத்தவருக்கு அதிலும் அதன் sc பிரிவு மாநில தலைவருக்கும், பாரம்பரிய குடும்பத்தை சார்ந்த பட்டியலனத்தை சார்ந்த ஒரு சீனியர் பெண் தலைவிக்கும் சீட் இல்லை. ஆறு ரிசல்ட் தொகுதியும் மீறி ஒரு பொது தொகுதியும் பட்டியல் இனத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, சரி இதை நாங்கள் வரவேற்கின்றோம். கிறிஸ்தவர்களுக்கு ஐந்து சீட் கொடுக்கப்பட்டுள்ளது, இதையும் நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இஸ்லாமியர்கள் தொடர்ந்த புறக்கணிக்கப்படுவதை நாங்கள் வரவேற்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.