நாளை விஜய் இப்தார் விருந்து- 1000 பேருக்கு அனுமதி
Mar 17, 2026, 20:33 IST
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை மாலை நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்
தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரமலான் பண்டிகையையொட்டி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாளை மாலை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்று இப்தார் நோன்பு நடைபெறும் என தெரிகிறது. இதில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளார். இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்து, கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் உட்பட பலர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.