×

ஹெல்மெட்  அணிந்து வித்தியாசமாக ஊர்வலம் நடத்திய புதுமண தம்பதி… அள்ளும் லைக்ஸ்…

எப்போதும் திருமணம் முடிந்த கையோடு மணமக்களை காரில் வைத்து உறவுகள் சூழ… ஊர்வலமாக அழைத்துப் போவார்கள்.சேலத்தில் ஒரு புதுமண ஜோடி,டூவீலரில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாகப் போய் விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தி வைரலாகி வருகிறது! எப்போதும் திருமணம் முடிந்த கையோடு மணமக்களை காரில் வைத்து உறவுகள் சூழ… ஊர்வலமாக அழைத்துப் போவார்கள்.சேலத்தில் ஒரு புதுமண ஜோடி,டூவீலரில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாகப் போய் விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தி வைரலாகி வருகிறது! இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய
 

எப்போதும் திருமணம் முடிந்த கையோடு மணமக்களை காரில் வைத்து உறவுகள் சூழ… ஊர்வலமாக அழைத்துப் போவார்கள்.சேலத்தில் ஒரு புதுமண ஜோடி,டூவீலரில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாகப் போய் விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தி வைரலாகி வருகிறது!

எப்போதும் திருமணம் முடிந்த கையோடு மணமக்களை காரில் வைத்து உறவுகள் சூழ… ஊர்வலமாக அழைத்துப் போவார்கள்.சேலத்தில் ஒரு புதுமண ஜோடி,டூவீலரில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாகப் போய் விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தி வைரலாகி வருகிறது!

இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் உயர்நீதி மன்றம் தாமாக முன் வந்து,கறார் காட்டியதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க போக்கு வரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.தவிர, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதத்தை உயர்த்த பிறப்பித்த  அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

மேலும்,ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள் போக்கு வரத்து போலீசாரிடம் சிக்கினால்,எவ்வளவு அபராதம் வசூலிக்கலாம் என்கிற  அதிகாரமும் போக்குவரத்து எஸ்.ஐ  உள்பட அனைத்து எஸ்.ஐ-க்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
இப்படியான சூழலில்தான், சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதி கீர்த்தி ராஜ்- தனசிரியா இருவரும் ஹெல்மெட் குறித்த ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த கையோடு,நெத்திமேட்டிலுள்ள திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மாப்பிள்ளையின் வீடுவரை இருவரும் ஹெல்மெட் அணிந்தபடி சென்று பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான இவர்களது முயற்சிக்கு வாழ்த்தும் லைக்கும் குவிந்து வருகிறது.

லைக்கும்,வாழ்த்தும் சொன்னால் மட்டும் போதாது… வண்டி ஓட்டுபவர்களுக்கு, பின் சீட்டில் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் போடவேண்டும் என்பதை உங்களில் இருந்தே ஆரம்பியுங்கள்… நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.