×

ஸ்மார்ட் டாய்லெட்டில் வைக்கப்பட்டிருந்த பாரதியார் புகைப்படம் நீக்கம்!

இந்த கழிப்பிடத்தைத் தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் எதிரில் ஸ்மார்ட் டாய்லெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் செலவில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே இந்த கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலும், தமிழகத்திலும் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பிடத்தைத் தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில் ஆண்களை குறிக்கும் படத்தில்
 

இந்த கழிப்பிடத்தைத் தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட  அலுவலகம் எதிரில்  ஸ்மார்ட் டாய்லெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  10 லட்சம் ரூபாய் செலவில் ஆண்  மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே இந்த கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலும், தமிழகத்திலும் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கழிப்பிடத்தைத் தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில்  ஆண்களை குறிக்கும் படத்தில்  பாரதியார் படம் இடம்பெற்றுள்ளது. இதை கண்ட சமூக மற்றும் தமிழ் ஆர்வலர்கள்  உலக புகழ்பெற்ற கவிஞரை இப்படியா இழிவுபடுத்துவது என்றும்  அதை உடனடியாக நீக்கி சம்மந்தப்பட்டவர்கள்  மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் அது பாரதியார் புகைப்படம் இல்லை என திருச்சி மாநகராட்சி விளக்கமளித்தது. ஆனால்  அது பாரதியாரை குறிக்கும் புகைப்படம் தான் என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது அந்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.