×

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவசர சட்டம் வேண்டும்: தினகரன் கோரிக்கை

ஸ்டெர்லைட் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: ஸ்டெர்லைட் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில்,
 

ஸ்டெர்லைட் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைட் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. 

இந்த நிலையில், இன்று அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இது தொடர்பாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தில் தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளில் தொடர் தோல்வியை தான் சந்தித்து வருகிறோம். முல்லை பெரியாறு, மேகதாது, நீட் என தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளில் எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து தோல்வியை சந்தித்து தான் வருகிறது. 

ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசுக்கு துவக்கத்தில் இருந்தே ஆலையை மூட வேண்டும் என்ற எண்ணமில்லை. இனிமேலாவது தாமதிக்காமல் ஒரு கொள்கை முடிவெடுத்து அவசியப்பட்டால் அவசர சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.