×

ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்கிட வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததற்கு எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததற்கு எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியது. 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என உத்தரவிடக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்திட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.