×

ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை.. கே.பி. ராமலிங்கம் பதவி பறிப்பு!

21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம்
 

21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனிடையே திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கட்சியினர் கூடுவதை தவிர்க்கும் வகையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தலாம் எனவும் கூறியிருந்தார். இதை எதிர்க்கும் வகையில் திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் ‘கொரோனா பரவியுள்ள இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது அவசியமற்றது’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.