×

ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து!

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு வயது காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுகள் இருந்து வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு வயது காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுகள் இருந்து வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நேற்றும் இன்றும் அப்போலோ மருத்துவமனை சென்று அன்பழகன்
 

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு வயது காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுகள் இருந்து வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு வயது காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுகள் இருந்து வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நேற்றும் இன்றும் அப்போலோ மருத்துவமனை சென்று அன்பழகன் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அன்பழகனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், “தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் மார்ச் 1-ம் தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லவேண்டாம் . முக்கால் நூற்றாண்டு காலம் தமிழினத்திற்கும், மொழிக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் உடல் நலிவுற்று இருக்கிறார். தமிழர் நலனுக்காக தன்னை பேராசிரிய பெருமகனார் நலம் பெற நம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவோம். பேராசிரியர் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை” என தெரிவித்துள்ளார்.