×

வெளியில் சுற்றுபவர்களை கண்டுபிடிக்க வந்துவிட்டது SmartCop ஆப்!

பொதுமக்கள் அலட்சியமாக எப்போதும் போலவே வெளியில் தேவையில்லாமல் நடமாடுவது வேதனை தரக்கூடியதாக உள்ளது. கொரோனாதொற்று காரணமாக கடந்த 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் அலட்சியமாக எப்போதும் போலவே வெளியில் தேவையில்லாமல் நடமாடுவது வேதனை
 

பொதுமக்கள் அலட்சியமாக எப்போதும் போலவே வெளியில் தேவையில்லாமல் நடமாடுவது வேதனை தரக்கூடியதாக உள்ளது.

கொரோனாதொற்று காரணமாக கடந்த 24 ஆம்  தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் அலட்சியமாக எப்போதும் போலவே வெளியில் தேவையில்லாமல் நடமாடுவது வேதனை தரக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை கண்டுபிடிக்க  நெல்லை மாநகர காவல்துறை சார்பாக SmartCop என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், இந்தச் செயலிமூலம் தேவையில்லால் வெளியில்  சுற்றுபவர்களின் விவரங்களை சேகரிக்க முடியும். பின்னர் ஊரடங்கை மீறுவோரின் பெயர், கைப்பேசி எண், வாகனப் பதிவெண், ஓட்டுநர் உரிம எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்டவற்றை இந்தச் செயலியில் பதிவுசெய்ய முடியும். அதுமட்டுமின்றி  ஜிபிஎஸ் மூலம் அவர்கள் இருக்கும் நிகழ்விடத்தை கண்டறிவதுடன் சம்பந்தபட்டவரின் புகைப்படம், வாகனத்தின் புகைப்படத்தை  செயலி மூலமே எடுத்து கொள்ளலாம். பிடிபட்ட நபரின் கைப்பேசி எண் அல்லது வாகன எண்ணை பதிவிடும் போது செயலி முந்தைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து அவருடைய முந்தைய தவறுகளைப் பற்றியும் எச்சரிக்கை செய்யும். முந்தைய தவறுகள் குறுகிய காலத்திற்குள் நடந்திருந்தால் அபராதமோ அல்லது வாகனத்தைப் பறிமுதல் செய்தோ நடவடிக்கை எடுக்க முடியும். அதுமட்டுமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு உறுதிசெய்து கொள்ளப்படும். அதனால் தவறான எண் கொடுக்க வாய்ப்பில்லை.  ஒவ்வொரு முறை நடவடிக்கையின்  போதும் எத்தனையாவது முறையாவது போலீசாரிடம் சிக்கியுள்ளோம் என்பதன் விவரமும் அதில் தெளிவாக குறிப்பிடபட்டு மெசேஜ் வந்து விடுகிறது. இதனால்  மக்கள் வெளியில் சுற்றுவதை குறைக்க முடியும் என்றும் வேலைபளு குறையும் என்றும்  நெல்லை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.