×

வெளிமாநில தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்.. அரசாணை வெளியீடு!

இதில் சிலர் நடந்தே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலையம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து பணி புரிபவர்கள் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் உணவுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் நடந்தே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலையம்
 

இதில் சிலர் நடந்தே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலையம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து பணி புரிபவர்கள் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் உணவுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் நடந்தே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலையம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அதனால் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்காக ரயில் சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வெளிமாநில தொழிலாளர்களோ காசு இல்லாமல் தவித்து வருவதால், அவர்களால் ரயில் கட்டணத்தை செலுத்த முடியாத பட்சத்தில் அதற்கான செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்குக்கான ரயில் கட்டணம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கப்படும் என்றும் அரசாணை வெளியிட்டுள்ளது.