☰
×

"வெறும் 15 ரூபாய்க்கு கோதுமை மாவு!" – ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சூப்பர் பரிசு!

 

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அரிசி கார்டுதாரர்கள், தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதில், கோதுமை வாங்கிக் கொள்ளலாம். 

சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில், கார்டுதாரருக்கு மாதம் அதிகபட்சம் 10 கிலோ, மற்ற இடங்களில், 5 கிலோ கோதுமை வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு மாதம், 30 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்கிறது. தற்போது, நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலானோர், இரவில் அரிசி சாதத்திற்கு பதில், சப்பாத்தி சாப்பிடுகின்றனர். வெளிச்சந்தையில் கிலோ கோதுமை மாவு, 50 - 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை வாங்க ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். 

எனவே, ரேஷன் கடைகளில், பாக்கெட்டில் கோதுமை மாவு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இந்த கோதுமை, மத்திய அரசிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதை தனியார், மாவு ஆலைகளில் அரைத்து, பாக்கெட்டில் வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா, 2 கிலோ கோதுமை மாவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிலோ, 15 ரூபாய்க்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.