×

வீரர் பிரயண்ட்டின் மறைவு விளையாட்டுத் துறைக்குப் பேரிழப்பு : ரா. சரத்குமார் அறிக்கை !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணியின் கூடைப்பந்து வீரர் வீரர் பிரயண்ட் நேற்று லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணியின் கூடைப்பந்து வீரர் வீரர் பிரயண்ட் நேற்று லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் செண்டிருந்த இவரது மகள் ஜியானா உட்பட அந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில்
 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணியின் கூடைப்பந்து வீரர் வீரர் பிரயண்ட் நேற்று லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணியின் கூடைப்பந்து வீரர் வீரர் பிரயண்ட் நேற்று லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் செண்டிருந்த இவரது மகள் ஜியானா உட்பட அந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரயண்ட் உயிரிழப்புக்குப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகரும் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்கா கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராகவும், 18முறை என்.பி.ஏவில் நட்சத்திர வீரராகவும், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற இளம் வயதில், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  “The Black Mamba” என்று செல்லமாக அழைக்கப்படும் பிரயண்ட்டின் மறைவு விளையாட்டுத் துறைக்குப் பேரிழப்பு. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த அவரது மகள் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.