×

வீட்டு வாடகை செலுத்த வேண்டுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னது இதுதான்!

தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது என
 

தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிக  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

 தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிக  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.மேலும் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தொற்றிலிருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்’ என்று அவர் கூறியுள்ளார். 

 

 

தொடர்ந்து பேசிய அவர்,  ‘கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் அவசியமில்லை.  
மருத்துவர்களுக்கு முககவசம் கிடைப்பதில்லை என்பது தவறான கருத்து. வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு தேவையான நிதி, அந்தந்த மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.  தற்போது தனிமை ஒன்றே கொரோனாவுக்கு மருந்து.  11 லட்சம் பாதுகாப்பு கவசங்களும், 1.5 கோடி முகக் கவசங்கள் (MASK) ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், வீட்டு வடகைதாரர்களின் பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.