×

‘வீடு, வாசல், உறவுகளை துறந்து வாழ்வாதாரம் தேடி வந்தவர்களுடன் நன்றியோடு துணை நிற்போம்’: மு.க ஸ்டாலின் பதிவு!

வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபரியும் நூற்றுக் கணக்கான மக்கள் இங்கேயே சிக்கித் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், வைரஸ் பரவுதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 968 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபரியும்
 

வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபரியும் நூற்றுக் கணக்கான மக்கள் இங்கேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், வைரஸ் பரவுதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 968 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபரியும் நூற்றுக் கணக்கான மக்கள் இங்கேயே சிக்கித் தவித்து வருகின்றனர். அதனால் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அரசு சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமில்லாமல் கட்சிகள் சார்பிலும் அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வீடு, வாசல் மற்றும் உறவுகளை துறந்து தங்களுடைய  வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய்   பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம்.ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான உள்கட்டமைப்புக்கு பின்னிருக்கும் இவர்களது உழைப்பு அளப்பரியது.நன்றியோடு துணை நிற்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.