×

விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள SFT SAT செயற்கைக் கோள்.. கண்டுபிடித்து அசத்திய புதுக்கோட்டை மாணவிகள் : குவியும் பாராட்டுக்கள் !

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சுபானா மற்றும் கீர்த்தனா. இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பல கண்டுபிடிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர். அதற்கான அங்கீகாரமும் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. இதே போலப் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் செயற்கைக் கோள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சுபானா மற்றும் கீர்த்தனா.
 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள்  சுபானா மற்றும் கீர்த்தனா.

இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பல கண்டுபிடிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர். அதற்கான அங்கீகாரமும் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. இதே போலப் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் செயற்கைக் கோள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள்  சுபானா மற்றும் கீர்த்தனா. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து SFT SAT என்ற விசயத்துக்குப் பயன்படும் சிறிய அளவிலான செயற்கைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய மாணவிகள், இந்த செயற்கைக்கோள் பருவநிலை மாற்றங்களையும் வளிமண்டலத்தில் உள்ள  காற்றின் நச்சுத்தன்மை, ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு மற்றும் காற்றின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றை அளவிடும் என்றும் இதன் மூலம் விவசாயத்துக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். 

மேலும், இந்த செயற்கைக்கோள்  ட்ரோன் உதவியைக் கொண்டு அறந்தாங்கியின் சில இடங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும், இந்த செயற்கைக் கோள் விண்ணில் நிலைநிறுத்தப் பட்டால் அதன் மூலம் விவசாயிகள் காலநிலை மாற்றத்தை முன்னரே அறிந்து கொண்டு அந்த சூழல் ஏற்றாற்போல பயிரிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நேற்று அமைச்சர் எம்.சி.சம்பத்தை இந்த மாணவிகள் நேரில் சந்தித்து செயற்கோளை பற்றி விவரித்து பாராட்டுகளைப் பெற்றனர். மெக்சிகோ நாட்டில் இருக்கும் ஏர்பேஸ்லா ஹீலியம் கேப்சூல் (Airbasela helium capsule) மூலம் இந்த செயற்கைக் கோள் கூடிய விரைவில் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.