விஜய் மீதான வழக்கில் திடீர் திருப்பம்
தவெக தலைவர் விஜய் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்டபெரியம்மா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர் கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது ஆர்வத்தில் அவர் விஜயின் ரேம்வாக்கில் நெருங்க முயன்றபோது விஜயின் பாதுகாவலர்கள் அவரை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சரக்குமார் தனது தாயாருடன் வந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மறு ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகர்விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். புகாரை ஏற்ற மாவட்ட காவல்துறை உத்தரவிட்டதின் பேரில் குன்னம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மற்றும் பெயர் தெரியாத பவுன்சர்கள் 10 பேர் மீதும 296(B) திட்டுவது, 115 ( 2 ) தாக்குவது, 182(2) வேகமாக தள்ளி விடுவது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் திடீர் திருப்பமாக தவெக தலைவர் விஜய் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் பதியப்பட்ட வழக்கு மதுரை கூடக்கோவில் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.