×

விஏஓ, இளநிலை உதவியாளர் உட்பட 6491 இடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்கிற அறிவிப்பணை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அடிப்படைக் கல்வி தகுதி 10ம் வகுப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்கிற அறிவிப்பணை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்கிற அறிவிப்பணை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அடிப்படைக் கல்வி தகுதி 10ம் வகுப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்கிற அறிவிப்பணை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அடிப்படைக் கல்வி தகுதி 10ம் வகுப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அமைச்சுகப்பணி தமிழ்நாடு நீதி அமைச்சப்பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்ம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணிகள் என ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4) உள்ளிட்டவற்றுக்கு ஆட்கள் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

கீழ்காணும் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (பதவி குறியீடு எண்: 2025): 397 காலி பணியிடங்கள்
இளநிலை உதவியாளர் (பதவி குறியீடு எண்: 2600) (பிணையமற்றது): 2688 காலி பணியிடங்கள்
இளநிலை உதவியாளர் (பிணையம்) (பதவி குறியீடு எண்: 2400) 104 காலி பணியிடங்கள்
வரி தண்டலர்- நிலை -1 ((பதவி குறியீடு எண்: 2500) : 39 காலி பணியிடங்கள்
நில அளவர் (பதவி குறியீடு எண்: 2800) 509 காலி பணியிடங்கள்
வரைவாளர் (பதவி குறியீடு எண்: 2900) 74 காலி பணியிடங்கள்
தட்டச்சர் (பதவி குறியீடு எண்: 2200) 1901 பணியிடங்கள்
சுருக்கெழுத்து தட்டச்சர் (பதவி குறியீடு எண்: 2900) 784 பணியிடங்கள்,
ஆக மொத்தம் 6491 பணியிடங்களில் சுருக்கெத்து தட்டச்சர் ( 784) பணியிடங்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியம் ரூ.19500-:ரூ.62000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20800-:ரூ.65500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விவரங்கள் தோரயமானது என அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, தேர்வுக்காக இன்று முதல் ( ஜுன் 14ம் தேதி) விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 14.  தேர்வு கட்டணமாக ரூ.100, செலுத்த வேண்டும். நிரந்தர பதிவு செய்யாதவர்கள் 150 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். தேர்வு நடைப்பெறும் தேதி செப்டம்பர் 1.

வயது வரம்பு: 01.07.2019 நிலவரப்படி விஏஓ பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர் குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மற்ற எஸ்சி எஸ்டி, எம்பிசிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 40வயது வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர், தண்டலர் வரைவாளர், நில அளவர் , தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குறைந்த பட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.