×

வி.வி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சென்னை: வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் அதிகளவில் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளர் வீடுகள் என 100-க்கும்
 

வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை: வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் அதிகளவில் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளர் வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று நெல்லை தூத்துக்குடி, திசையன்விளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால்தான் வருமான வரித்துறை இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.