×

வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சி கலகலத்துவிடும்; எடப்பாடியே என்கிட்ட சொன்னாரு!? ராஜகண்ணப்பன் அதிரடி!

அதிமுகவில் சுயமரியாதை இல்லாததால் வெளியேறியதாக, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை: அதிமுகவில் சுயமரியாதை இல்லாததால் வெளியேறியதாக, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலகி திமுக கூட்டணிக்கு அளித்தார். 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன் இதையடுத்து அதிமுகவிலிருந்து விலகி, மக்கள் தமிழ்தேசம் என்ற தனிக்கட்சி தொடங்கிய அவர், பின்னர் திமுகவில் இணைந்து இளையான்குடி எம்எல்ஏவானார். அதன்பின் அங்கிருந்தும் விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
 

அதிமுகவில் சுயமரியாதை இல்லாததால் வெளியேறியதாக, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

மதுரை: அதிமுகவில் சுயமரியாதை இல்லாததால் வெளியேறியதாக, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலகி  திமுக கூட்டணிக்கு  அளித்தார். 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன் இதையடுத்து அதிமுகவிலிருந்து விலகி,  மக்கள் தமிழ்தேசம் என்ற தனிக்கட்சி தொடங்கிய அவர், பின்னர் திமுகவில் இணைந்து இளையான்குடி எம்எல்ஏவானார். அதன்பின் அங்கிருந்தும் விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். இதையடுத்து ராஜ கண்ணப்பனுக்கு கட்சித்தாவல் ஒன்றும் புதிதல்ல என்று அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்து வந்தனர். 

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அதிமுகவில் முகம் தெரியாத நபர்களாக இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் உள்ளனர். இப்போதுள்ள சூழலில் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கவில்லையென்றால் கட்சியிலிருந்து விலகி விடுவார்கள் அதனால் தான் இந்த முறை வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னிடமே கூறினார்’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ‘ திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்.  அரசியலில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தேர்தலுக்குப் பின்னர் அறிவிப்பேன்.  எம்.பி சீட்டுக்காக நான் அதிமுகவிலிருந்து வெளியேறவில்லை. அங்குச் சுயமரியாதை இல்லை, அதனால் தான் விலகினேன்’ என்று விளக்கமளித்தார். 

இதையும் வாசிக்க: தேர்தல் செலவுக்கு ஆதார் கார்டை வைத்து கொண்டு 50 லட்சம் லோன் கேட்ட சுயேட்சை வேட்பாளர்: ஆடிப்போன வங்கி ஊழியர்கள்!?