×

வாரணாசியில் மோடியுடன் ஓ.பி.எஸ்… எடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த ஷாக்..!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக மூலம் ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. அப்படியெல்லாம் உன்றும் நடக்கவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். எடப்பாடிக்கு வலதுகரமாக இருக்கும் அமைச்சர் வேலுமணியும் வாரணாசி சென்று இருதார் என்பதையும் கவனிக்க வேண்டும். வாரணாசியில் போட்டிடும் பிரதமர் மோடி மனுதாக்கல் செய்த நிலையில் அங்கு துணை முதல்வர் தனது குடும்பத்தாருடன் நான்கு நாட்களுக்கு முன்பே கிளம்பி விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அங்கு செல்லவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக மூலம் ஓ.பன்னீர்செல்வம்
 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக மூலம் ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. அப்படியெல்லாம் உன்றும் நடக்கவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். எடப்பாடிக்கு வலதுகரமாக இருக்கும் அமைச்சர் வேலுமணியும் வாரணாசி சென்று இருதார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

வாரணாசியில் போட்டிடும் பிரதமர் மோடி மனுதாக்கல் செய்த நிலையில் அங்கு துணை முதல்வர் தனது குடும்பத்தாருடன் நான்கு நாட்களுக்கு முன்பே கிளம்பி விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அங்கு செல்லவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக மூலம் ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. அப்படியெல்லாம் உன்றும் நடக்கவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். எடப்பாடிக்கு வலதுகரமாக இருக்கும் அமைச்சர் வேலுமணியும் வாரணாசி சென்று இருதார் என்பதையும் கவனிக்க வேண்டும். 

 உண்மையில் எடப்பாடி பழனிசாமி வாரணாசிக்கு செல்லாததற்கான காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவே பெரும்பாலான அறிக்கைகள், உளவுத்துறை சோர்ஸ் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. 

ஜெயலலிதா இறந்த பிறகு நடந்த அமைச்சர்களின் கோமாளித் தன கூத்து, தர்மயுத்தம், கூவத்தூர் சமாச்சாரம், தமிழக நலன் சார்ந்த விஷயங்கள் புறக்கணிப்பு போன்றவற்றால் இயல்பாகவே இலை கட்சிக்கு எதிர்ப்பு அலை ஜெயலலிதா இறப்புக்கு பிறகு வெளிப்படையாகவே தெரியவந்தது. இந்த எதிர்ப்பு அலை எதிர்கட்சிகளுக்கு இயல்பாகவே சாதகமாக மாறிவிட்டன. 

இரண்டாவது விஷயம் செல்வாக்குமிக்க தலைவர்கள் அதிமுகவில் உருவாகாமல் போனது. மூன்றாவது விஷயம் ஏட்டிக்கு போட்டியாக அதிமுகவும், அமமுகவும் தலா 2 ஆயிரம் கொடுத்து வாக்குகளை பிரித்து கொண்டது. இது முழுக்க முழுக்க அதிமுகவுக்கு விழவேண்டிய வாக்குகள்தான். எதிர்கட்சி வாக்குகள் பணத்தால் சிதறவில்லை. நான்காவது விஷயம், தமிழகத்தில் பாஜவை மக்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. 

மதரீதியாக மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாகவும் அனைத்து மதம், இனத்தினரும் பாதிக்கப்பட்டனர். அவர்களும் அதிமுகவுக்கு எதிராக திரும்பி உள்ளனர். இதுபோன்ற காரணங்களால் நடந்து முடிந்த 18ம், நடக்க உள்ள 4 தொகுதிகளிலும் எதிர்ப்பு அலைகள் கடுமையாக எழுந்து அதிமுகவை வீழ்த்தும் அளவுக்கு காணப்படுகின்றன. அவற்றை சரி செய்வது குறித்தும் வேறு வழிகள் குறித்து ஆலோசிக்கவே பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்யும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி  செல்லவில்லை’’ என்கிறார்கள்.