×

வாட்ஸ் அப் வீடியோவால் ரத்தானது டிரைவர், கண்டக்டரின் உரிமம்

கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்து கடந்த 15ந் தேதி மதியம் 1 மணிக்கு தனியார் பேருந்து திருச்சிக்கு புறப்பட்டது. கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்து கடந்த 15ந் தேதி மதியம் 1 மணிக்கு தனியார் பேருந்து திருச்சிக்கு புறப்பட்டது. அதில் பண்டாரவாடை செல்வதற்காக பஸ்ஸில் ஏறி, அமர்ந்த பயணியை, ‘பஸ் இடையில் எங்கும் நிற்காது’ என்று தகாத வார்த்தைகளில் டிரைவர், கண்டக்டர் 2 பேரும் தரக்குறைவாக திட்டியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து வெளியிட்டார் அந்த
 

கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்து கடந்த 15ந் தேதி மதியம் 1 மணிக்கு தனியார் பேருந்து திருச்சிக்கு புறப்பட்டது.

கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்து கடந்த 15ந் தேதி மதியம் 1 மணிக்கு தனியார் பேருந்து திருச்சிக்கு புறப்பட்டது.

அதில் பண்டாரவாடை செல்வதற்காக பஸ்ஸில் ஏறி, அமர்ந்த பயணியை, ‘பஸ் இடையில் எங்கும் நிற்காது’ என்று தகாத வார்த்தைகளில் டிரைவர், கண்டக்டர் 2 பேரும் தரக்குறைவாக திட்டியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து வெளியிட்டார் அந்த பயணி.
இதைத் தொடர்ந்து கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், பஸ் உரிமையாளர், ஓட்டுநர், நடத்துனரை அழைத்து விசாரித்து, டிரைவர், கண்டக்டர் திட்டியது உண்மை என தெரிந்ததும், அவர்களின் உரிமத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோவைப் பார்த்து, உடனே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

விடீயோவை பார்க்க இதை கிளிக் செய்யுங்கள்:https://youtu.be/DDkWZoJ0Igs