×

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி.. சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவியேற்க இடைக்காலத் தடை !

சங்கராபுரம் ஊராட்சி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தேவி மாங்குடி என்பவரும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தேவி மாங்குடி என்பவரும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. அதில், அந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன், தேவி மாங்குடி 318 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுப் பெற்றதாக அறிவித்து தேவிக்குத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்து சான்றிதழ் வழங்கினர்.
 

சங்கராபுரம் ஊராட்சி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில்  தேவி மாங்குடி என்பவரும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில்  தேவி மாங்குடி என்பவரும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. அதில், அந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன், தேவி மாங்குடி 318 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுப் பெற்றதாக அறிவித்து தேவிக்குத் தேர்தல் அதிகாரிகள் அறிவித்து சான்றிதழ் வழங்கினர்.

அதனை ஏற்றுக் கொள்ளாத பிரியதர்ஷினி, ஒரு வாக்குப்பெட்டி எண்ணப்படவில்லை என்றும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்துமாறும் கோரிக்கை விடுத்தார். அதன் படி, அப்பகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அதில், பிரியதர்ஷினி 63 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இரண்டு பேரும் வெற்றி பெற்றதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது. 

இந்நிலையில், மறு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தேவி உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையரும், பிரியதர்ஷினியும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் ஜனவரி 6 ஆம் தேதி பதவியேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.