×

வருகிறது வடகிழக்குப் பருவமழை ! இயல்பாக பெய்யும் என வானிலை மையம் நம்பிக்கை

இயல்பை விட 16 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிவித்த பாலசந்தின் சென்னையில் 59 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது என்றும், இது இயல்பை விட 39 சதவிகிதம் அதிகம் என்றும் கூறினார். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும், இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தாக
 

இயல்பை விட 16 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிவித்த பாலசந்தின் சென்னையில் 59 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது என்றும், இது இயல்பை விட 39 சதவிகிதம் அதிகம் என்றும் கூறினார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும், இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தாக கூறிய பாலச்சந்திரன் ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகம், புதுச்சேரியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறி தெரிவித்தார் இது இயல்பு மழை அளவு 33 சென்ட்டி மீட்டர் ஆகும்.

இயல்பை விட 16 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிவித்த பாலசந்தின் சென்னையில் 59 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது என்றும், இது இயல்பை விட 39 சதவிகிதம் அதிகம் என்றும் கூறினார்.

அடுத்த 2 நாட்களுக்கு விருதுநகர். சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவித்த பாலச்சந்திரன், அக்டோபர் 1-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அரசு அதிகாரிகளுடன் பாலச்சந்திரன் நடத்திய ஆலோசனையில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்தும் அதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் மற்றும் ரயில்வே, போக்குவரத்து, மின்சாரம், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.