×

வரி செலுத்தாத திரையரங்க நிர்வாகம்! தியேட்டர் முன் குப்பை லாரியை நிறுத்தி அராஜகம் செய்த மாநகராட்சி…  

சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.எஸ்.எம்.திரையரங்க நிர்வாகம் கடந்த சில வருடங்களாக சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி கட்டவில்லை எனக்கூறப்படுகிறது. சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.எஸ்.எம்.திரையரங்க நிர்வாகம் கடந்த சில வருடங்களாக சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி கட்டவில்லை எனக்கூறப்படுகிறது. கடந்த 2018 முதல் 2019ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி 1 வது மண்டலத்திற்கு 5,99,970 ரூபாய் சொத்து வரி மற்றும் கேளிக்கை வரியாக எம்.எஸ்.எம்.திரையரங்கம் கட்டவேண்டும். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட
 

சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.எஸ்.எம்.திரையரங்க நிர்வாகம் கடந்த சில வருடங்களாக சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி கட்டவில்லை எனக்கூறப்படுகிறது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.எஸ்.எம்.திரையரங்க நிர்வாகம் கடந்த சில வருடங்களாக சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி கட்டவில்லை எனக்கூறப்படுகிறது.

கடந்த 2018 முதல் 2019ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி 1 வது மண்டலத்திற்கு  5,99,970 ரூபாய் சொத்து வரி மற்றும் கேளிக்கை வரியாக எம்.எஸ்.எம்.திரையரங்கம் கட்டவேண்டும். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட அந்த திரையரங்கம் அரசுக்கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது. வரி செலுத்தாத திரையரங்கத்திற்கு பல முறை நோட்டிஸ் அனுப்பியும் கண்டுக்கொள்ளவில்லை என மாநகராட்சி நிர்வாகம் குற்றஞ்சாட்டுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்கத்திற்கு முன்பு குப்பை லாரியை நிறுத்தி வரியை கட்ட சொல்லி மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்றைக்கே வரியை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கம் முன்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால் திரையரங்கில் இன்றைய பகல் நேர காட்சிகள் அத்து செய்யப்பட்டன.