×

வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்ட களத்திலேயே இளம் ஜோடிக்கு நடந்த திருமணம்..!

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒரு இளம் ஜோடிக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. எத்தனை போராட்டங்கள் நடந்தாலும், சிஏஏ சட்டம் திரும்பிப்பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி சென்னை – வண்ணாரப்பேட்டையில்
 

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒரு இளம் ஜோடிக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. எத்தனை போராட்டங்கள் நடந்தாலும்,  சிஏஏ சட்டம் திரும்பிப்பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று  கூறி சென்னை – வண்ணாரப்பேட்டையில்  கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் இஸ்லாமியருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இதனைக் கண்டித்தும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இஸ்லாமியர்கள் கடந்த 4 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல், போராட்டத்தை இன்னும் வலுப்பெறச் செய்தது. ஆனால், போராட்டக்காரர்கள் தான் போலீசாரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒரு இளம் ஜோடிக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதனால், போராட்ட களத்திலேயே அந்த ஜோடிக்கு அனைத்து இஸ்லாமியர்களின் முன்னிலையிலும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த திருமணத்திலும் சிஏஏவுக்கு எதிரான பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.