×

‘வங்கியில் கடன் வாங்கி தருகிறேன்’ : பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது !

இவர் முன்வைப்பு தொகையைச் செலுத்தினால் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வங்கியில் கடன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். தென்கரை அடுத்த தண்டுப்பாளையம் பகுதியில் அருள் கிராம முன்னேற்றத் தொண்டு நிறுவனம் உள்ளது. இதனை போடியை சேர்ந்த அருள் செல்வி என்பவர் நடத்தி வருகிறார். இவர், அந்த நிறுவனத்தில் 12 பேர் கொண்ட பெண்கள் குழுவிற்கு உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார். அதில் மொத்தமாக 200 பெண்களுக்கு மேல் சேர்ந்துள்ளனர். இவர் முன்வைப்பு தொகையைச் செலுத்தினால் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம்
 

இவர் முன்வைப்பு தொகையைச் செலுத்தினால் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வங்கியில் கடன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். 

தென்கரை அடுத்த தண்டுப்பாளையம் பகுதியில் அருள் கிராம முன்னேற்றத் தொண்டு நிறுவனம் உள்ளது. இதனை போடியை சேர்ந்த அருள் செல்வி என்பவர் நடத்தி வருகிறார். இவர், அந்த நிறுவனத்தில் 12 பேர் கொண்ட பெண்கள் குழுவிற்கு உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார். அதில் மொத்தமாக 200 பெண்களுக்கு மேல் சேர்ந்துள்ளனர். இவர் முன்வைப்பு தொகையைச் செலுத்தினால் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வங்கியில் கடன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். 

அதனை நம்பிய பெண்கள், தலா ரூ,3,700 ஐ முன்வைப்பு தொகையாக அருள் செல்வியிடம் கொடுத்துள்ளனர். 200 பெண்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்ட அருள் செல்வி, கடன் வாங்கி கொடுக்காமல் பல நாட்களாக ஏமாற்றிக் கொண்டே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், அங்குச் சென்ற காவல்துறையினர் அருள் செல்வியிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அதில், அருள் செல்வி பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதனையடுத்து, அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.