×

லீப் வருடத்தில் பிறந்த தலைமை ஆசிரியர்.. பிறந்த நாளன்று நேர்ந்த சோகம்!

ஜஸ்டஸ் பிரவீன் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், அல்லி ஜெயராணி தனியார்ப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜஸ்டஸ் பிரவீன் (51) -அல்லி ஜெயராணி. ஜஸ்டஸ் பிரவீன் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், அல்லி ஜெயராணி தனியார்ப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். ஜஸ்டஸ் பிரவீன் பிப்ரவரி 29 (லீப் ஆண்டு) பிறந்தவர்
 

ஜஸ்டஸ் பிரவீன் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், அல்லி ஜெயராணி தனியார்ப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜஸ்டஸ் பிரவீன் (51) -அல்லி ஜெயராணி. ஜஸ்டஸ் பிரவீன் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், அல்லி ஜெயராணி தனியார்ப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். ஜஸ்டஸ் பிரவீன் பிப்ரவரி 29 (லீப் ஆண்டு) பிறந்தவர் என்பதால் இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட அவரது மகனும், மகளும் திட்டமிட்டுள்ளனர். 

கடந்த 29 ஆம் தேதி காலை ஜஸ்டஸ் பிரவீனும் அல்லி  ராணியும் ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இவர்கள் கூனிமாவிளை அருகே சென்ற போது எதிரே பைக்கில் வேகமாக வந்த இளைஞர், இவர்கள் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜஸ்டஸ் பிரவீனும் அவரது மனைவியும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயராணி உயிர் பிழைத்த நிலையில் ஜஸ்டஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். லீப் ஆண்டு பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ஜஸ்டஸ் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் அன்று உயிரிழந்தது அவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.