×

“ரெண்டு முறை விஷம் கொடுத்தும் அந்தாளு சாகல…அதான் கல்லை தலையில் போட்டு கொன்னோம்” மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!

சம்பவத்தன்று மீண்டும் மதுவில் விஷத்தை கலந்து ஏரிக்கரைக்கு அழைத்து சென்று குடிக்க செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பகுதி சின்ன மூக்கனூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். 34 வயதான ரமேஷ்குமார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் ரமேஷ்குமார் தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து
 

சம்பவத்தன்று மீண்டும்  மதுவில் விஷத்தை கலந்து ஏரிக்கரைக்கு அழைத்து சென்று குடிக்க செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பகுதி சின்ன மூக்கனூரை  சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார்.  34 வயதான ரமேஷ்குமார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில்  கடந்த 4-ந் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் ரமேஷ்குமார் தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து ரமேஷ்குமாரின் மனைவி நித்யா ஜோலார்பேட்டை  போலீசில் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி நித்யா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார், இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.  இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதில், ரமேஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் குடிபோதையில் நித்யாவின் தம்பி  அரவிந்தன் மனைவியிடம் தவறாக நடந்துள்ளார். இதையறிந்த நித்யா மற்றும் அவரது தம்பி ரமேஷ்குமார் மீது கோபத்திலிருந்துள்ளனர். அப்போது தான் நித்யாவுக்கும் அவர் என் தம்பியின் நண்பர் மேஸ்திரி கணபதியுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரமேஷ்குமார் தங்கள் வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக நினைத்த நித்யா, கணபதி, தம்பி அரவிந்தன் அவரை கொல்ல திட்டமிட்டு  மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்துள்ளனர். ஆனால்  ரமேஷுக்கு மயக்கம் ஏற்பட்டதே  தவிர அவர் சாகவில்லை. இதனால் சம்பவத்தன்று மீண்டும்  மதுவில் விஷத்தை கலந்து ஏரிக்கரைக்கு அழைத்து சென்று குடிக்க செய்துள்ளனர். ஆனால்  இந்தமுறையும் அவருக்கு ஏதும் ஆகவில்லை.  அதனால் பக்கத்தில் கிடந்த கல்லை ரமேஷ்குமாரின் தலையில் போட்டு  கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து நித்யா, அவரது தம்பி அரவிந்தன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேசமயம் தலைமறைவாக உள்ள மேஸ்திரி கணபதியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.