×

ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு பல கோடிகளை எடுத்த குஜராத் நிறுவனம்! – சந்தேகத்தை கிளப்பும் யெஸ் வங்கி 

வாராக் கடன் அதிகரிப்பு காரணமாக யெஸ் வங்கியை ரிவர்வ் வங்கி சமீபத்தில் கையகப்படுத்தியது. புதிதாக கடன் வழங்க தடை, வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக ரிவர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் வங்கியிலிருந்து பல கோடி எடுத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாராக் கடன் அதிகரிப்பு காரணமாக யெஸ் வங்கியை
 

வாராக் கடன் அதிகரிப்பு காரணமாக யெஸ் வங்கியை ரிவர்வ் வங்கி சமீபத்தில் கையகப்படுத்தியது. புதிதாக கடன் வழங்க தடை, வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக ரிவர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் வங்கியிலிருந்து பல கோடி எடுத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாராக் கடன் அதிகரிப்பு காரணமாக யெஸ் வங்கியை ரிவர்வ் வங்கி சமீபத்தில் கையகப்படுத்தியது. புதிதாக கடன் வழங்க தடை, வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ.265 கோடியை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை அந்த நிறுவனம் பரோடா வங்கியில் டெபாசிட் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதே போல் மிகப்பெரிய அளவில் டெபாசிட் செய்துள்ள நிறுவனங்களும் பணத்தை எடுத்து வேறு வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ரிவர்வ் வங்கியின் நடவடிக்கை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி, ரிசர்வ் வங்கியில் நிறுவனங்களுக்கு உளவு பார்த்து சொல்லும் நபர்கள் உள்ளார்களா, இப்படிப்பட்ட நபர்களை வைத்துக்கொண்டு ரிசர்வ் வங்கி எப்படி செயல்பட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.