×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : பரோலில் வெளியே வந்தார் ராபர்ட் பயஸ்

28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் தனது மகனின் திருமண வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் 1 மாதம் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறையிடம் மனு அளித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயஸ், முருகன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ் தனது மகனின் திருமண வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் 1 மாதம் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறையிடம் மனு
 

28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும்  ராபர்ட் பயஸ் தனது மகனின் திருமண வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் 1 மாதம் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறையிடம் மனு அளித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயஸ், முருகன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும்  ராபர்ட் பயஸ் தனது மகனின் திருமண வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் 1 மாதம் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறையிடம் மனு அளித்தார். ஆனால், சிறை அதிகாரிகள் அவரது மனுவைப் பரிசீலிக்கவில்லை. இதனால், ராபர்ட் பயஸ் உயர்நீதி மன்றத்தில் பரோல் அளிக்கும் படி மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  சிறை அதிகாரிகளின் கருத்தைத் தெரிவிக்கும் படி உத்தரவிட்டிருந்தது. 

பயஸுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பரோல் வழங்கலாம் என்று சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, நீதிபதிகள் ராபர்ட் பயஸுக்கு கடந்த 21 ஆம் தேதி, 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். பரோலில் சென்ற நளினி மற்றும் பேரறிவாளன் பின்பற்றும் விதிமுறைகளான அரசியல் தலைவர்களைச் சந்திக்கக் கூடாது, ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது போன்றவற்றை ராபர்ட் பயஸும் பின்பற்றும் படி அறிவுறுத்தியிருந்தது. 

உச்சநீதிமன்றம் ராபர்ட் பயஸுக்கு பரோல் அளித்ததன் படி, இன்று சிறையிலிருந்து ராபர்ட் 30 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். ராபர்ட் தனது வீட்டிற்குச் செல்லாமல் தனது வழக்கறிஞர் சந்திரசேகர் வீட்டில் தங்கி இருந்து அவரது மகனின் திருமண வேலைகளைக் கவனிக்கவுள்ளார்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.