×

‘ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி’ : மருதநாயகம் பாடலை வெளியிட்ட கமல் ; எதற்காக தெரியுமா?

பொன்பரப்பில் வாக்குப்பதிவின் போது நடந்த கொடூர தாக்குதலுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: பொன்பரப்பில் வாக்குப்பதிவின் போது நடந்த கொடூர தாக்குதலுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் கடந்த 18 ஆம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அந்த வேளையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான
 

பொன்பரப்பில் வாக்குப்பதிவின் போது  நடந்த கொடூர தாக்குதலுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை:  பொன்பரப்பில் வாக்குப்பதிவின் போது  நடந்த கொடூர தாக்குதலுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் கடந்த 18 ஆம்  தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அந்த வேளையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்து சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர்.இந்த மோதலில் மோதலில் ஒருவர் தாக்கப்பட்டதுடன் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சிலர் சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் இருசக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு  25க்கும் மேற்பட்டோர் மீது  வழக்கு பதிவு செய்தனர். 

அதே போல்  பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் 2 பேர் பேசிக் கொள்வது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ்ஆப்பில் பரவிய விவகாரத்தால், அந்த சமூகத்தினர் மத்தியில் கொதிப்பு நிலவுகிறது. மேலும், அங்குள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்களில் சிலர் அடித்து நொறுக்கியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தேர்தல் சமயத்தில் நடந்த இந்த சாதிவெறி  தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல் ஹாசன், ‘மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும்  அவமானம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் மருதநாயகம் படத்திற்காக அவர் இளையராஜாவுடன் அவர் எழுதிய பாடலையும் பதிவிட்டுள்ளார். அதில்,  

‘மதங்கொண்டு வந்தது சாதி
இன்றும்
மனிதனைத் துரத்துது மனு
சொன்ன நீதி.
சித்தம் கலங்குது சாமி – இங்கு
ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி’

என்று தமிழகத்தில் ஜாதி வெறி இன்னும் கூட அடங்கவில்லை என்பதை இவ்வரிகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதையும் வாசிக்க: பொன்பரப்பி கொடூர தாக்குதல்: போராட்டத்தில் குதிக்க போவதாக திருமா அறிவிப்பு!