ரஞ்சித்தை தொடர்ந்து பாடகர் மனோ அமமுகவில் இணைந்தார்
நடிகர் ரஞ்சித்தை தொடர்ந்து பாடகர் மனோ அமமுகவில் இணைந்துள்ளார். சென்னை: நடிகர் ரஞ்சித்தை தொடர்ந்து பாடகர் மனோ அமமுகவில் இணைந்துள்ளார். பாமக மீதுள்ள அதிருப்தியால் நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார். இந்நிலையில் பாடகர் மனோ அமமுகவில் சேர்ந்துள்ளார். திரைத்துறை பிரபலங்களை கட்சியில் இணைப்பதன் மூலம் வாக்கு சேகரிக்கலாம் என அமமுக தரப்பு திட்டம் தீட்டியிருப்பதாக பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையில் இருந்த வரை கூட பிரபலமாகாத மனோ, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜட்ஜாக பங்கேற்று வெகுசனங்களின்
Mar 9, 2019, 15:14 IST
நடிகர் ரஞ்சித்தை தொடர்ந்து பாடகர் மனோ அமமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஞ்சித்தை தொடர்ந்து பாடகர் மனோ அமமுகவில் இணைந்துள்ளார்.
பாமக மீதுள்ள அதிருப்தியால் நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார். இந்நிலையில் பாடகர் மனோ அமமுகவில் சேர்ந்துள்ளார். திரைத்துறை பிரபலங்களை கட்சியில் இணைப்பதன் மூலம் வாக்கு சேகரிக்கலாம் என அமமுக தரப்பு திட்டம் தீட்டியிருப்பதாக பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையில் இருந்த வரை கூட பிரபலமாகாத மனோ, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜட்ஜாக பங்கேற்று வெகுசனங்களின் ஆதரவை பெற்றார். அவர் அமமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு ஆதரவாக அமையும் என பேசப்படுகிறது.
அமமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து மனோ அமமுகவில் இணைந்தார்.