×

ரஜினியை நம்புறது வேஸ்ட்: உண்மையை உடைத்த பாஜக மூத்த தலைவர்; குழப்பத்தில் பாஜகவினர்!?

ரஜினியை பாஜகவினர் நம்ப கூடாது. அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை : ரஜினியை பாஜகவினர் நம்ப கூடாது. அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணியன் சுவாமி. இவருடைய கருத்து எப்போதும் மற்ற பாஜக தலைவர்களின் கருத்துகளிலிருந்து எப்போதும் மாறுபட்டதாகவே இருக்கும். அந்த வகையில் ரஜினிகாந்த் பாஜக உறவு குறித்து அக்கட்சி
 

ரஜினியை பாஜகவினர் நம்ப கூடாது. அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

சென்னை : ரஜினியை பாஜகவினர் நம்ப கூடாது. அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணியன் சுவாமி. இவருடைய கருத்து எப்போதும் மற்ற பாஜக தலைவர்களின் கருத்துகளிலிருந்து  எப்போதும் மாறுபட்டதாகவே  இருக்கும். அந்த வகையில் ரஜினிகாந்த் பாஜக உறவு குறித்து அக்கட்சி பிரமுகர்கள் பலரும் நல்லவிதமாகவே கூறிவரும் நிலையில் அதற்கு நேர்மறையாகப் பேசி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.

இந்நிலையில்  இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ரஜினிகாந்த் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றாரே என்று கேள்வியை எழுப்பிய போது, ‘ரஜினி  பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இதுவரை அவர் மும்மொழி கொள்கை, ராஜீவ்  காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று கூறவில்லையே. அப்படி இருக்கும் போது  அவர் எப்படி பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று கூறமுடியும்?’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி இன்னும் கூட வரவில்லை. இனியும் வருவார் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் அவரை நம்பாமல் தனித்து தனித்து போட்டியிட முயற்சிக்க வேண்டும்.  அதே சமயம் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று  கூறினார்.

ரஜினி மோடியை புகழ்ந்து பேசுவது, மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது  எனச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரே அவரை நம்பக் கூடாது என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.