×

ரஜினி சர்ச்சை பேச்சு குறித்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது : அமைச்சர் கடம்பூர் ராஜு

ரஜினி இவ்வாறு பேசியதற்காகத் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சமீபத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கு ரஜினிகாந்த், நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அவுட்லுக் பத்திரிகையில் வெளியானதை தான் சொன்னேன். இதற்காக நான் வருத்தம்
 

ரஜினி இவ்வாறு பேசியதற்காகத் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

சமீபத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கு ரஜினிகாந்த், நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அவுட்லுக் பத்திரிகையில் வெளியானதை தான் சொன்னேன். இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரஜினி இவ்வாறு பேசியதற்காகத் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,  வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அவகாசம் அளிக்காமல் நீதிமன்றத்தை அணுகியதால், ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ரஜினி பெரியார் குறித்துப் பேசியது எல்லாம் முடிந்து விட்டது. ஆனால்,. இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.