×

யார் தளபதி? மதிமாறனின் சர்ச்சை பேச்சு குறித்து ஊடகங்களுக்கு சன்பிக்சர்ஸ் நோட்டீஸ்!

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறனின் பேச்சை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறனின் பேச்சை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மைலாப்பூரில் கடந்த வாரம் திமுக மகளிரணி சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
 

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறனின் பேச்சை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறனின் பேச்சை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மைலாப்பூரில் கடந்த வாரம் திமுக மகளிரணி சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.

கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர்களாக எழுத்தாளர் மதிமாறன், வழக்கறிஞர் கிருபா முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய எழுத்தாளர் மதிமாறன், தமிழகத்திற்கு ஒரே தளபதி தான் என்றும் அது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்று பேசியிருந்தார். அதுமட்டுமின்றி, திரைப்படத்தில் மிச்சமான வசனங்களை எல்லாம் நடிகர்கள் மேடைகளில் பேசிவிடுவதாக நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் பேச்சாளர்களுள் ஒருவரான கிருபா முனுசாமி தன் முகநூலில், மதிமாறனின் பேச்சை ஒளிபரப்பிய அனைத்து ஊடகங்களுக்கும் வீடியோவை அழிக்கக்கோரி சன் நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஜய் குறித்து மதிமாறன் அவதூறாக பேசியிருந்தால், அது விஜய்யின் பிரச்சனை, அதில் சன் நிறுவனம் தலையிட வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

allowfullscreen

கிருபா முனுசாமியின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே, மு.க குடும்பத்திற்குள் பல்வேறு முரன்பாடுகள் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகிவரும் நிலையில், சன் பிக்சர்ஸின் இந்த நடவடிக்கை அதை உறுதிபடுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.