×

மோடி – சீன அதிபர் சந்திப்பில் முக்கிய பங்காற்றிய தமிழர் இவர் தான்!

நேற்றைய நிகழ்வில் இரு நாடு தலைவர்களும் மாமல்லபுரத்தின் புராதான சின்னங்களைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் சீன அதிகாரி ஒருவரும், இந்திய அதிகாரி ஒருவரும் உடனிருந்தனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின்போது, தமிழகத்தைச் சேர்ந்த மது சுதன் ரவீந்திரன் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டது அனைவரையும் கவர்ந்தது. மாமல்லபுரத்தில் சீன அதிபர் – பிரதமர் மோடியின் சந்திப்பு நடந்தேறி வருகிறது. இரண்டு நாட்கள் பயணமான இது இன்றுடன் முடிகிறது. நேற்றைய நிகழ்வில் இரு
 

நேற்றைய நிகழ்வில் இரு நாடு தலைவர்களும் மாமல்லபுரத்தின் புராதான  சின்னங்களைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் சீன அதிகாரி ஒருவரும், இந்திய அதிகாரி ஒருவரும் உடனிருந்தனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின்போது, தமிழகத்தைச் சேர்ந்த  மது சுதன் ரவீந்திரன் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டது அனைவரையும் கவர்ந்தது. 

மாமல்லபுரத்தில் சீன அதிபர் – பிரதமர் மோடியின் சந்திப்பு நடந்தேறி வருகிறது. இரண்டு நாட்கள்  பயணமான இது இன்றுடன் முடிகிறது. நேற்றைய நிகழ்வில் இரு நாடு தலைவர்களும் மாமல்லபுரத்தின் புராதான  சின்னங்களைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் சீன அதிகாரி ஒருவரும், இந்திய அதிகாரி ஒருவரும் உடனிருந்தனர்.

இதில் இந்திய அதிகாரியாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த மதுசுதன் ரவீந்திரன். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடித்த மதுசுதன், 2007ஆம் ஆண்டு வெளியுறவுப் பணியில் இணைந்தார்.ஆரம்பத்தில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இவர்  சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இரு ஆண்டுகள் பணியாற்றினார்.
2013ஆம் ஆண்டு சீனாவில் இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலராக நியமிக்கப்பட்ட இவர் தற்போது  முதன்மைச் செயலராகப் பணி செய்து  வருகிறார். 

 

இவர்  சீன மொழியான மாண்டரின், ஆங்கிலத்தில் கைதேர்ந்தவர் என்பதால் இம்முறை சீன மற்றும் இந்திய நாட்டு தலைவர்கள் இருவரின் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழர் என்பதால் தமிழக கலாச்சாரத்தை விளக்கும் பணியும் அவருக்கு எளிதாக இருந்தது என்றே கூற வேண்டும். நேர்த்தியாக உடனுக்குடன் இருநாட்டுத் தலைவர்களின் பேச்சை மொழிபெயர்த்த மதுசுதன் பலரையும் கவர்ந்துள்ளார்.