×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு… அதிகாரி இடமாற்றம்… இடையில் நடந்தது என்ன !?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பலராலும் அறியப்பட்ட கோவிலாகும். பங்காரு அடிகளார் நிர்வகித்து வரும் இந்த கோவிலுக்கு சொந்தமாக பள்ளி,கல்லூரி, மருத்துவமனை போன்ற பணம் புழங்கும் பல்வேறு விஷயங்கள் செயல்பட்டு வருகின்றன. மேல்மருவத்தூர் ஊரின் எல்லைக்குள் செல்லும் போதே, பங்காரு அடிகளார் மட்டுமின்றி அவரது மகன்கள், பேரன் ஆகியோரின் ஆளுயர கட் அவுட்கள்
 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட  அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட  அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் பலராலும் அறியப்பட்ட கோவிலாகும். பங்காரு அடிகளார்  நிர்வகித்து வரும் இந்த கோவிலுக்கு  சொந்தமாக  பள்ளி,கல்லூரி, மருத்துவமனை போன்ற பணம் புழங்கும் பல்வேறு விஷயங்கள் செயல்பட்டு வருகின்றன. மேல்மருவத்தூர் ஊரின் எல்லைக்குள் செல்லும் போதே, பங்காரு அடிகளார் மட்டுமின்றி அவரது  மகன்கள், பேரன் ஆகியோரின்  ஆளுயர கட் அவுட்கள் நம்மை வரவேற்கும். இன்னும் சொல்லப்போனால், மேல்மருவத்தூர் என்ற ஊரே பங்காரு அடிகளாரின் கைவசம் தான் உள்ளது என்ற கூடுதல் தகவலும் எல்லோரும் அறிந்ததே. 

இப்படிச் செல்வச் செழிப்பாக  இருந்து வரும்  இந்த கோவிலை  அறநிலைய துறைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு செய்ய வேலூர் அற நிலையத் துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். உத்தரவின் அடிப்படையில்  காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழு இரு தினங்களுக்கு முன் ஆய்வு செய்யச் சென்றது. ஆனால்  அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அறநிலையத்துறை அனுமதியில்லாமல் ஆய்வு நடத்த உத்தரவிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல்  இந்த விவகாரத்தை அரசு அதிகாரி தன்னிச்சையாக எடுத்திருக்க வாய்ப்பில்லை.! அப்படி இருக்கும் போது, அறநிலையத்துறை அனுமதியில்லாமல் ஆய்வு நடந்துள்ளது என்று கூறுவது கண்துடைப்பே என்று  பரவலாகப் பேசப்படுகிறது.

ஒருவேளை மேல்மட்டத்தில் உள்ள தலைமைகளின் அறிவுறுத்தலின் படி இந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது பணப்பெட்டிகள் கைமாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது!

முன்னதாக பங்காரு அடிகளாருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது பலராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆதிபராசக்தி கோவில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர எடுத்திருக்கும் இந்த முயற்சி எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் அடக்கி வாசியுங்கள் என்று   என்று அடிகளாருக்கு மணியடித்துச் சொல்வதாகவே பார்க்கப்படுகிறது.