×

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான வீட்டு உரிமையாளர் கைது!

17 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்
 

17 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அப்பகுதி மக்கள் 17 உயிர்கள் பறிபோனதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவலர்கள் கலைந்து போகச் சொல்லி அவர்கள் மீது தடியடி நடத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து, வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை வலைவீசித் தேடி வந்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.