×

‘மெர்சல்’ பட பாணியில் சிகிச்சையளித்த 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் காலமானார்!

ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 71. சென்னை: ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 71. மெர்சல் படத்தில் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டும் வாங்கும் மருத்துவராக நடித்திருப்பார் நடிகர் விஜய். சினிமாவில் மட்டுமே இது சாத்தியம். நிஜத்தில் சாத்தியமில்லை என படத்தைப் பார்த்தவர்கள் பலர் விமர்சித்தனர்.
 

ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 71.

சென்னை: ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 71.

மெர்சல் படத்தில் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டும் வாங்கும் மருத்துவராக நடித்திருப்பார் நடிகர் விஜய். சினிமாவில் மட்டுமே இது சாத்தியம். நிஜத்தில் சாத்தியமில்லை என படத்தைப் பார்த்தவர்கள் பலர் விமர்சித்தனர். ஆனால் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். 

மிகக் குறைந்த கட்டணத்தில் கடந்த 45 ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வந்த ஜெயச்சந்திரன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.  இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வராத பல உயர்தர மருத்துவமனைகள், பணம் சம்பாதிக்கும் நோக்குடன் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே தங்கள் கரிசனத்தைக் காட்டி வரும் நிலையில் மருத்துவம் செய்வதை சேவையாக நினைத்து வாழ்ந்து வரும் இது போன்ற சிலரும் இன்னும்  இருக்கத்தான் செய்கின்றனர்.