×

மெரினா கடற்கரையில் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி : சென்னை மாநகராட்சி தகவல்

கடற்கரையில் உள்ள நடைபாதை மற்றும் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால், கடற்கரையில் உள்ள நடைபாதை மற்றும் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், மெரினாவில் தற்போது மொத்தமாக
 

கடற்கரையில் உள்ள நடைபாதை மற்றும் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால், கடற்கரையில் உள்ள நடைபாதை மற்றும் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், மெரினாவில் தற்போது மொத்தமாக 962 கடைகள் உள்ளதாகவும், அதில் 900 கடைகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, அனுமதி வழங்கப்பட்ட அனைத்து கடைகளுக்கும் 27.4 கோடி ரூபாயில் கடைகள் அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

அதே போல, மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் அருகே 66 லட்சம் ரூபாய் செலவில், மீன் விற்பனைக் கடைகள் அமைத்துத் தரப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உணவுக்கான அனுமதி பெறாத கடைகளை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டதன் படி கடற்கரையை அழகுபடுத்தச் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஓத்தி வைத்துள்ளனர்.