×

முதுகில் கத்தி துண்டு: அலட்சியத்தால் அப்படியே தையல் போட்டு அனுப்பிய அரசு மருத்துவர்கள்!

பாரதியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் பாரதிக்கு முதலுதவி அளித்ததுடன், தையல் போடப்பட்டு இருந்தது கடலூர் : முதுகில் கத்தித் துண்டை வைத்து அரசு மருத்துவர்கள் தையல் போட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவரது பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர் ஜானகிராமன். பாரதிக்கும் ஜானகிராமனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 14 ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜானகிராமன் பாரதியின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.
 

பாரதியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் பாரதிக்கு முதலுதவி அளித்ததுடன், தையல் போடப்பட்டு இருந்தது

கடலூர் : முதுகில் கத்தித் துண்டை வைத்து அரசு மருத்துவர்கள் தையல் போட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவரது பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர் ஜானகிராமன். பாரதிக்கும் ஜானகிராமனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 14 ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜானகிராமன் பாரதியின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து பாரதியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் பாரதிக்கு முதலுதவி அளித்ததுடன், தையல் போடப்பட்டு இருந்தது. 

இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய பாரதியின் வலி மட்டும் குறையவில்லை. இதையடுத்து மீண்டும் அவரது முதுகை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில்  கத்தியின் உடைந்த பகுதி ஒன்று முதுகுப் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் உள்பட அனைவரும் பதறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து  பாரதி மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரது முதுகிலிருந்த கத்தி துண்டு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. முதுகில் உடைந்த கத்தி இருப்பதுகூட தெரியாமல் அரசு மருத்துவர்கள் சிகிச்சையளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.