×

முதியவர்களை குறிவைத்து கொலை செய்து வந்த சைக்கோ கைது: போதை பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்!

இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொலையாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர் கல்லால் தாக்கபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதேபோல் மறுநாள் சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த முதியவரும் கொலை செய்யப்பட்டார். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொலையாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைக்கப்பட்டது.
 

இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொலையாளியைப் பிடிக்க  மூன்று தனிப்படைகளை அமைக்கப்பட்டது.

கடந்த 2 ஆம் தேதி  சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர் கல்லால் தாக்கபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதேபோல் மறுநாள் சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த முதியவரும் கொலை செய்யப்பட்டார். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொலையாளியைப் பிடிக்க  மூன்று தனிப்படைகளை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கொலைகள் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்தனர். அதில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் பெரிய கல் ஒன்றை தூக்கி வந்து முதியவர்களைத் தாக்கி கொன்று விட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் காசுகளை திருடிச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யபோது அதில் இருக்கும் இளைஞரை போல கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய  விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அவர் பேச குழம்பிய போலீசார் சிசிடிவி காட்சிகளிலிருந்த இளைஞரின் அடையாளங்களையும், போலீசாரிடம் சிக்கிய இளைஞரின் புகைப்படங்களையும் பெங்களூரில் உள்ள தடயவியல்  பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அதில் கொலை செய்தவர் அந்த இளைஞர் தான் என்பது உறுதியானது. 

இதனால் விசாரணையை தீவிரப்படுத்தியதில் கொலை குற்றவாளியான அவர்  திண்டுக்கல் மாவட்டம் சித்தேரியூரைச் சேர்ந்த 21 வயதான  ஆண்டிச்சாமி என்பது தெரியவந்தது. கஞ்சா மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையான அவரை  உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டி விட்டனர். இதனால் சேலம் வந்த அவர் கையிலிருந்த பணம் தீர்ந்துபோய் விட்டதால், போதை பொருட்கள் வாங்க முடியாமல் சுற்றி திரிந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆதரவற்ற முதியவர்களை கொலை செய்து அவர்களிடமிருந்து பணத்தை திருடி போதை பொருட்களை உபயோகித்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தற்போது அவரை கைதுசெய்துள்ள போலீசார் போதை பழக்கத்திலிருந்து மீட்க அவருக்கு பயிற்சி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.