×

முதலமைச்சர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை – முதல்வர் @நியூயார்க் மாநாடு!

அரசியலில் ஒரு படி மேலே வந்திருக்கிறேன், நான் முதல்வராக வருவேன் என்று கனவுகூட காணவில்லை. ஆனாலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் எனது உழைப்பால் இங்கே நிற்கிறேன் வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க, யாதும் ஊரே திட்டத்தை நியூயார்க் தமிழர்கள் மத்தியில் துவங்கிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. நிகழ்ச்சியின்போது பேசிய முதல்வர் ’தமிழக அரசு தொழில்துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் யாதும் ஊரே என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் முதலீட்டு ஆலோசனைகள் நேரடியாக
 

அரசியலில் ஒரு படி மேலே வந்திருக்கிறேன், நான் முதல்வராக வருவேன் என்று கனவுகூட காணவில்லை. ஆனாலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் எனது உழைப்பால் இங்கே நிற்கிறேன்

வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க, யாதும் ஊரே திட்டத்தை  நியூயார்க் தமிழர்கள் மத்தியில் துவங்கிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. நிகழ்ச்சியின்போது பேசிய முதல்வர் ’தமிழக அரசு தொழில்துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் யாதும் ஊரே என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் முதலீட்டு ஆலோசனைகள் நேரடியாக தமிழக அரசை வந்தடையும். தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான வழிமுறைகளை கூற தயாராக உள்ளோம். ஒற்றைச் சாளர முறை, சிறப்பான நிர்வாகம், அமைதியான சூழல், திறன்மிகு மனிதவளம், சிறந்த உள்கட்டமைப்பு என பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன’ என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், ”தனிப்பட்ட முறையில் என்னைப் பொருத்தவரையில் அரசியலில் ஒரு படி மேலே வந்திருக்கிறேன், நான் முதல்வராக வருவேன் என்று கனவுகூட காணவில்லை. ஆனாலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் எனது உழைப்பால் இங்கே நிற்கிறேன்” என்றார். நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.