×

மு.க.ஸ்டாலின் ஆணியே புடுங்க வேண்டாம்… ஆகப்பெரும் திடீர் சிக்கலில் எடப்பாடி- ஓ.பி.எஸ்..!

ஆக மொத்தத்தில் எடப்பாடிக்கும், ஓ.பி.எஸுக்கும் இந்த விஷயம் மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் ராஜ்ய சபா எம்பி பதவிக்கு குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது. ஏற்கனவே மக்களவையில் தற்போது ஒரு எம்பியான ரவீந்திரநாத் குமார் மட்டுமே உள்ள நிலையில் ராஜ்ய சபா எம்பி பதவியை குறிவைத்து அதிமுகவினர் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். ஜெயலலிதா இருக்கும் வரை அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போதோ இபிஎஸ், ஓபிஎஸ் என ஆளாளுக்கு ஒவ்வொருவரையும்
 

ஆக மொத்தத்தில் எடப்பாடிக்கும், ஓ.பி.எஸுக்கும் இந்த விஷயம் மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுகவில் ராஜ்ய சபா எம்பி பதவிக்கு குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது. ஏற்கனவே மக்களவையில் தற்போது ஒரு எம்பியான ரவீந்திரநாத் குமார்  மட்டுமே உள்ள நிலையில் ராஜ்ய சபா எம்பி பதவியை குறிவைத்து அதிமுகவினர் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். 

ஜெயலலிதா இருக்கும் வரை அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போதோ இபிஎஸ், ஓபிஎஸ் என ஆளாளுக்கு ஒவ்வொருவரையும் பிடித்து கட்சித் தலைமையை நச்சரித்து வருகின்றனர். அதிமுகவிற்கு கிடைக்கும் 3 ராஜ்ய சபா எம்பி பதவிகளில் ஒன்றை பாமகவிற்கு தருவதாக மக்களவை தேர்தலுக்கு கூட்டணி வைத்தபோது உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஒரு பதவியை தமிழகத்தைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தர வேண்டும் என பாஜ கட்டாயப்படுத்தி வருகிறது. பாஜவுக்கும், பாமகவுக்கும் ஒன்று போனால் எஞ்சியது ஒன்றே ஒன்றுதான். நெல்லையைச் சேர்ந்த முன்னாள் ராஜ்ய சபா எம்பியான மனோஜ்பாண்டியனுக்கு  மக்களவை தேர்தலில் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் தோற்றுப் போனதால் இந்த ராஜ்ய சபா எம்பி பதவிக்கு குறி வைத்துள்ளார். 

சட்டப்புலியான இவர் ஓபிஎஸ் ஆதரவாளர். இவர் மூலம் இதற்காக காய் நகர்த்தி வருகிறார் மனோஜ் பாண்டியன். ஏற்கனவே ராஜ்ய சபா எம்பி பதவி வகித்தவர் என்பதால் தனக்குத்தான் மீண்டும் தர வேண்டும் என்கிறாராம். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கேபி.முனுசாமி, மைத்ரேயன் என பலரும் ராஜ்ய சபா எம்பி பதவி கேட்போர் பட்டியலில் உள்ளனர். இப்படி ஒரு பதவிக்கு அதிமுகவில் அடிதடி சண்டை போடாத குறையாக உள்ளது. இதற்கு இடையில் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜும் தனக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வேண்டும் எனக் கேட்டு வருகிறாராம்.  

ஆக மொத்தத்தில் எடப்பாடிக்கும், ஓ.பி.எஸுக்கும் இந்த விஷயம்  மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.