×

மு.க.அழகிரிக்கு அதிரடியாக ஆப்பு வைத்த பாஜக… அஞ்சாநெஞ்சனை அலறவிடும் பகீர் பின்னணி இதுதான்..!

தமிழகத்தில் தேர்தல் முடிந்த ஆறே நாட்களில் மு.க.அழகிரி மகனின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையை ஏவிவிட்டு முடக்கியுள்ளது மோடி அரசு. தமிழகத்தில் தேர்தல் முடிந்த ஆறே நாட்களில் மு.க.அழகிரி மகனின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையை ஏவிவிட்டு முடக்கியுள்ளது மோடி அரசு. ஒலிம்பஸ் கிரைனைட் பிரைவேட் லிமிடட் என்ற அழகிரி மகன் நடத்தும் இந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக கிரைனைட் தோண்டப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள்
 

தமிழகத்தில் தேர்தல் முடிந்த ஆறே நாட்களில் மு.க.அழகிரி மகனின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையை ஏவிவிட்டு முடக்கியுள்ளது மோடி அரசு.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த ஆறே நாட்களில் மு.க.அழகிரி மகனின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையை ஏவிவிட்டு முடக்கியுள்ளது மோடி அரசு.   

ஒலிம்பஸ் கிரைனைட் பிரைவேட் லிமிடட் என்ற அழகிரி மகன் நடத்தும் இந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக கிரைனைட் தோண்டப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது 40 கோடி ரூபாய் சொத்தை முடக்க உத்தவிட்டனர்.  மதுரை மற்றும் சென்னையிலுள்ள தயாநிதிக்கு சொந்தமான 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வைப்புநிதி உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடந்து 6 நாட்களில் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்ததற்கு பலமான பின்னணி உள்ளாதாகக் கூறுகிறார்கள் காவித்துண்டு நிர்வாகிகள். திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதில் இருந்தே பாஜகவில் வந்து இணைந்து விடுமாறு தமிழக பாஜக தலைவர்கள் மூலம் டெல்லியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மு.க.அழகிரியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார். 

அழகிரிக்கு எதிராக திமுக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசி வந்தனர். சம்மதிக்காத அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாகவும், மகனின் வழக்குகளை முடித்து தருவதாகவும் பேரம் பேசியது பாஜக தலைமை.  எதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை அழகிரி. 

அவர் கட்சியில் இணையாவிட்டாலும் பரவாயில்லை. தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்தால் போதும் எனக் கேட்டு வந்தது பாஜக. எப்படியும் தங்கள் வழிக்கு வந்துவிடுவார் என்பதால் மதுரை தொகுதியில் பாஜக தங்களது கட்சி வேட்பாளராக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை களமிறக்கத் திட்டமிட்டு வந்தது. தேர்தல் அறிவிக்கும் நாள் வரை பாஜக மு.க.அழகிரியை நம்பி இருந்தது. ஆனால் அவர் ஒத்துக் கொள்ளாததால் மதுரையை கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்து பின் வாங்கியது பாஜக. 

அந்த நாட்களில் அமலாக்கத்துறையை ஏவிவிட்டால் அழகிரி ஆதரவாளர்களின் கோபத்திற்கு ஆளாகக் கூடும். இதனால் சிவகங்கை பகுதியில் ஹெச்.ராஜாவுக்கு வரவேண்டிய வாக்குகளும் வந்து சேராமல் போய் விடும் என காத்திருந்த பாஜக, அழகிரி அடம்பிடித்ததை மனதில் வைத்து தேர்தல் முடிந்த ஆறாவது நாளே தயாநிதி அழகிரி வழக்கில் அதிரடியாக கை வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. 

தம்பி மு.க.ஸ்டாலின் ஒருபுறம் ஒதுக்கி வைக்க, பாஜக அரசும் பலி வாங்கும்படலத்தை ஆரம்பித்து விட்டதே என தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம் அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி..!